முகப்பு
இந்தியா

தலைமறைவான 20 கரோனா நோயாளிகளைத் தேடுகிறது காவல்துறை

கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பிய நிலையில் கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காணாமல் போன 20 தலைமறைவு கரோனா நோயாளிகளை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
தலைமறைவான 20 கரோனா நோயாளிகளைத் தேடுகிறது காவல்துறை
பகிர்:


டேஹ்ராடூன்: கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பிய நிலையில் கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காணாமல் போன 20 தலைமறைவு கரோனா நோயாளிகளை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் முனி கி ரெட்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 கரோனா நோயாளிகள் காணாமல் போன நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 பேரையும் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்களது விவரங்கள் குறித்து ராஜஸ்தான் மாநில அரசுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கும்ப மேளாகவில் பங்கேற்க வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உறுதி செய்யப்படுவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தானிலிருந்து வந்த 20 கரோனா நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து காணாமல் போயிருப்பது, கரோனா விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →