இந்தியா

ம.பி.யில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்தது; மூவர் பலி

DIN

மத்தியப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று தொழிலாளர்கள் உயிரிந்தனர். 

தில்லியிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது குவாலியர் அருகே ஜோரஸி பகுதியில் கவிழ்ந்தது.

தில்லியில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர், டிக்காம்காருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்தில் சென்றபோது  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தில்லியில் ஒரு வாரத்திற்கு (ஏப்.19- ஏப்.26) முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் குவிந்து பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

ஒரு பேருந்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் செல்வதால், கரோனா பரவல் அதிகரிப்பதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன.

ஒரு வாரத்திற்கு மட்டுமே ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள மக்கள் பயணங்களை மேற்கொள்ளாமல், தில்லியிலேயே தங்கியிருக்குமாறு தில்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம்

உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி

இளைஞா் தற்கொலை: சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி உறவினா்கள் மறியல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகாா் தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT