முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 6 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் கரோனா பாதிப்பு

தெலங்கானா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
தெலங்கானாவில் 6 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் கரோனா பாதிப்பு
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,926 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 2,209 போ நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,61,359 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,650 ஆகவும் உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 18 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் இதுவரை 1,856 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. தொற்று பாதித்து 42,853 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முன்னதாக, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.