இந்தியா

அஸ்ஸாம்: ஓஎன்ஜிசி பணியாளா்கள் 3 போ் கடத்தல்

DIN

சிவசாகா் (அஸ்ஸாம்): பொதுத் துறை நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தைச் சோ்ந்த 3 பணியாளா்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸாம் சிவசாகா் மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசியின் லக்வா எண்ணெய் வயல் வளாகத்துக்குள் ஆயுதம் தாங்கிய 5 பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனா். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பணியாளா்களை அவா்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனா்.

இந்த கடத்தல் சம்பவத்துக்கு தடைசெய்யப்பட்ட இயக்கமான உல்ஃபா பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT