முகப்பு
இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற உதவிய தில்லி காவல்துறை

தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 32 கரோனா நோயாளிகளுக்காக தில்லி காவல்துறையினர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 32 கரோனா நோயாளிகளுக்காக தில்லி காவல்துறையினர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தில்லியின் ஜானக்புரி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் 32 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதாக அவசரத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கிர்டி நகர் பகுதியிலுள்ள ஆக்ஸிஜன் விநியோகிக்கும் இடத்திலிருந்து காவல்துறையினர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.

காவலர்களின் உதவியுடன் 11 சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →