முகப்பு
இந்தியா

உ.பி.யில் வாகனங்கள் மீது ரயில் மோதல்: 5 பேர் பலி

உ.பி.யில் ஆளில்லா ரயில்வே சிராசிங்கை கடக்க முயன்ற வாகனங்கள் மீது ரயில் மோதியில் 5 பேர் பலியானார்கள்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

உ.பி.யில் ஆளில்லா ரயில்வே சிராசிங்கை கடக்க முயன்ற வாகனங்கள் மீது ரயில் மோதியில் 5 பேர் பலியானார்கள். 

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பில்பூர்-மிரான்பூர் எனும் இடத்தில் ஆளில்லா ரயில்வே சிராசிங்கை பைக் மற்றும் டிரக் ஆகிய வாகனங்கள் இன்று அதிகாலை கடக்க முயன்றன. 

அப்போது அந்த வழியாக வந்த சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு வாகங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் டிரக்கில் பயனம் செய்தவர்களில் 4 பேர், பைக்கில் பயணித்த ஒருவர் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

மேலும் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு உ.பி. அரசு தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →