முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 28447 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் ஒரேநாளில் 28,447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கேரளத்தில் மேலும் 28447 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கேரளத்தில் ஒரேநாளில் 28,447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிதாக 28,447 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1350502 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 1,78,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு 27 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கேரளத்தில் 5056 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →