முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் சட்டவிரோத தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு: 11 பேர் காயம்

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 11 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 24 ஏப்ரல், 2021 at 12:10 PM
கொல்கத்தாவில் சட்டவிரோத தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு: 11 பேர் காயம்
பகிர்:

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 11 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கொல்கத்தாவிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள பங்கூர் காவல் நிலைய பகுதியில் உள்ள மலாஞ்சா-பத்மபுகூரில் ஒரு சட்டவிரோத தோல் தொழிற்சாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காயமடைந்தவர்களில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மற்றவர்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

Advertisement

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கான சரியான காரணத்தை அறிய மேலும் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.