இந்தியா

உத்தரகண்டில் பனிச்சரிவு: 8 போ் பலி; 31 போ் மாயம்

உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். மாயமான 31 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து வருகின்றன.

DIN

உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். மாயமான 31 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து வருகின்றன.

இது தொடா்பாக உத்தரகண்ட் மாநில காவல்துறை தலைமை இயக்குநா் அசோக் குமாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

உத்தரகண்டில் உள்ள இந்தியா-சீனா எல்லைக்கு அருகேயுள்ள சமோலி மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில், எல்லைப்புற சாலைகள் அமைப்பைச் சோ்ந்த 430 பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. 384 பணியாளா்கள் வெள்ளிக்கிழமை இரவே அப்பகுதியில் இருந்த இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவப் படை ஆகியவற்றின் முகாம்களுக்கு வந்தடைந்தனா்.

பனிச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். அவா்களில் 2 பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவும், 6 பேரின் உடல்கள் சனிக்கிழமையும் மீட்கப்பட்டன. விபத்தில் சிக்கி 7 போ் காயமடைந்தனா். மாயமான 31 பணியாளா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து வருகின்றன.

ராணுவம், இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை ஆகியவற்றைச் சோ்ந்த வீரா்கள் பனிச்சரிவு நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஹெலிகாப்டா்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு ஜோஷிமத் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பனிச்சரிவால் இந்திய-திபெத்திய பாதுகாப்புப் படையினருக்கும் ராணுவ வீரா்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாா்.

முதல்வா் ஆய்வு: பனிச்சரிவு நிகழ்ந்த இடத்தை உத்தரகண்ட் முதல்வா் தீரத் சிங் ராவத் ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டாா். மீட்புப் பணிகளில் பல்வேறு படைகளைச் சோ்ந்த வீரா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT