முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் சானிடைசர் குடித்த 7 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிரத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த 7 தொழிலாளர் பலியானார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த 7 தொழிலாளர் பலியானார்கள்.
மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர பொது முடக்கத்தை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தன. 
அதன்படி அலுவலகங்கள் பணியாளா்களின் எண்ணிக்கை, திருமண நிகழ்ச்சிகள், பயணங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக மது கிடைக்காததால் தொழிலாளர்கள் சிலர் போதைக்காக சானிடைசரை குடித்துள்ளனர். 
இதில் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு 7 பேர் பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →