இந்தியா

ஆக்ஸிஜன் விரைவு ரயில் உத்தரப்பிரதேசத்தை அடைந்தது

PTI


லக்னௌ: திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட மூன்று டேங்கர்களை சுமந்து கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்த புறப்பட்ட ஆக்ஸிஜன் விரைவு ரயில் உத்தரப்பிரதேசத்தை வந்தடைந்தது.

கரோனா தொற்று அதிகரிப்பால், மருத்துவத்துக்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததால், மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் டேங்கர்களைக் கொண்டு செல்லும் பணியில் இந்திய ரயில்வே இறங்கியது.

இதையடுத்து, திரவ ஆக்ஸிஜன் நிரப்பிய டேங்கர்களை ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு மாநிலத்துக்குள் பல்வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் பணியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மூன்று டேங்கர்களை ஏற்றிக் கொண்டு உத்தரப்பிரதேசம் வந்த ஆக்ஸிஜன் விரைவு ரயிலில் இருந்த இரண்டு டிரக்குகள் லக்னௌவுக்கும், ஒரு டிரக் வாராணசிக்கும் வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT