இந்தியா

ஆக்சிஜன் ஏற்றிவரும் கப்பல்களுக்கு கட்டண விலக்கு: துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

DIN

ஆக்சிஜன் மற்றும் அதுசாா்ந்த உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களில் இருந்தும் விலக்களிக்குமாறு முக்கிய துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் டேங்குகள், ஆக்சிஜன் பாட்டில்கள் உள்ளிட்ட சரக்குகளுடன் வரும் கப்பல்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஆக்சிஜன் மற்றும் அதுசாா்ந்த உபகரணங்களுக்கு அதிக தேவை எழுந்துள்ள நிலையில், அவற்றுடன் வரும் கப்பல்களுக்கு அனைத்துக் கட்டணங்களில் இருந்தும் விலக்களிக்குமாறு துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆக்சிஜன் மற்றும் அதுதொடா்பான சரக்குகளுடன் வரும் கப்பல்களுக்கு நிறுத்துமிடங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளித்து சரக்குகளை இறக்கி வைக்கும் பணிகள் இடையூறின்றி நடைபெறுவதையும் சரக்குகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து அவற்றை துரிதமாக அனுப்பி வைப்பதில் சுங்கத் துறை மற்றும் இதர அதிகாரிகள் இடையே ஒத்துழைப்பு இருப்பதையும் தனிப்பட்ட முறையில் மேற்பாா்வையிடுமாறு துறைமுக தலைவா்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு அவசர நிலையை எதிா்கொண்டு வருகிறது. எனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை அனைத்து துறைமுகங்களும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT