இந்தியா

கரோனா உதவி: மும்பையில் 1,100 சிறப்புக் காவலர்கள் நியமனம்

DIN

மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிக்காக 1,100 சிறப்புக் காவலர்களை மும்பை காவல்துறை நியமித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிற்கும் ஒரு சிறப்பு காவலரை நியமிக்க மும்பை காவல்துறை திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மும்பையில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 5 நபர்களுக்கு மேல் கரோனா உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் சீல் வைக்கப்படுகின்றன.

சீல் வைக்கப்படும் குடியிருப்புகளுக்கு தலா ஒரு சிறப்பு காவலரை மும்பை காவல்துறை நியமிக்கவுள்ளது. ஆட்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தேவையான பொருள்களை ஏற்பாடு செய்யும் வகையிலும் அவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

இதனையொட்டி கூடுதலாக 1,100 சிறப்பு காவலர்களை மும்பை காவல்துறை நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT