முகப்பு
இந்தியா

மே 2-ல் கேரளத்தில் முழு முடக்கம் இல்லை: உயர்நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:

மே 2-ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் மாநிலத் தேர்தல் ஆணையம் செய்துள்ளதால் மே 2-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்க உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதி முழு முடக்கம் விதிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், கரோனா பெருந்தொற்று காலத்திலும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது. 

மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு பிறப்பித்துள்ள நடவடிக்கைகளை கட்டயாம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →