Karuna Shukla_lib 
இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் கருணா சுக்லா கரோனாவுக்கு பலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணா சுக்லா கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராய்ப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா கேர் மருத்துவமனைகளில் உயிரிழந்தார். 

ANI

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணா சுக்லா கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராய்ப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா கேர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகள் சுக்லா, கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது. 

கடந்த 2013ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜகவின் லகான் லால் சாஹுவால் தோற்கடிக்கப்பட்டார்.

பலோதபஜாரில் கருணா சுக்லாவின் இறுதிச்சடங்கு  நடைபெறுகின்றன. இவரது மறைவிற்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

SCROLL FOR NEXT