இந்தியா

உத்தரகண்டில் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி: ரூ.400 கோடி ஒதுக்கீடு

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ.400 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் உத்தரகண்டிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

இந்நிலையில் உத்தரகண்ட் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்காக ரூ.400 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஹைதராபாத்திற்கு 7,500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT