இந்தியா

கேரளத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 38,607 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,57,548 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 38,607 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 300 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 48 பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 5,259ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 2,84,086 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 21,116 பேர் குணமடைந்தனர். இதுவரை 12,44,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 616 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 
5,69,831 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT