இந்தியா

ராஜஸ்தான் முதல்வருக்குகரோனா பாதிப்பு

DIN

ஜெய்ப்பூா்: ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் (69) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது மனைவி சுனிதாவுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, முதல்வருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்போது, அவா்கள் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனா்.

இது தொடா்பாக கெலாட் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா அறிகுறிகள் ஏதுமில்லை. எனினும், எனது மனைவிக்கு பாதிப்பு உறுதியானதை அடுத்து எனக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கரோனா உறுதியானதால் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

குணமடைய பிரதமா் வாழ்த்து: ராஜஸ்தான் முதல்வரும், அவரது மனைவியும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று வாழ்த்துவதாக பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா். ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, காங்கிரஸ் தலைவா்கள், மாநில அமைச்சா்கள் என பலரும் அசோக் கெலாட் விரைவில் குணமடைய வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT