முகப்பு
இந்தியா

அம்பாலா கூர்நோக்கு இல்லத்தில் 31 சிறார்களுக்கு கரோனா

அம்பாலாவில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 31 சிறார்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
கோப்புப் படம்.
பகிர்:

அம்பாலாவில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 31 சிறார்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 71 சிறார்கள் தங்கியுள்ளனர். இச்சிறுவர்களில் பலருக்கு கரோனா அறிகுறி தென்படவே அவர்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அவற்றின் முடிவுகள் இன்று கிடைத்துள்ள நிலையில் அதில் 31 சிறார்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா தொற்று உறுதியான சிறுவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.