இந்தியா

யோகியை புகழ்ந்து தள்ளிய அமித் ஷா

DIN

சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச தடய அறிவியல் கழக கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டம் ஒழுங்கை உத்தரப் பிரதேசம் சிறப்பாக கையாண்டதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகழாரம் சூட்டினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "2019ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். எனவே, அதற்கு முன்பு மாநிலம் எப்படி இருந்தது என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வு காணப்படும்.

அதன் காரணமாகவே, மக்கள் அங்கிருந்து வெளியேறினர். பாதுகாப்பற்று இருக்கிறோம் என்ற உணர்வு பெண்களுக்கு இருந்தது. ஏழை மக்களின் நிலத்தை மாஃபியா கும்பல் பிடிங்கியது. காலை பொழுதிலேயே துப்பாக்குச்சூடு நடைபெறும். கலவரங்கள் அதிகமாக நிகழ்ந்தன.

2017ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசம் வளர்ச்சி மிக்க மாநிலமாக உருவாக்கப்படும் என பாஜக உறுதி அளித்தது. சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக புதுபித்தது. யோகியும் அவரது குழுவும் சட்டம் ஒழுங்கில் உத்தரப் பிரதேசத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்று விட்டதை நான் பெருமையுடன் இன்று சொல்லுவேன்.

சாதியை பார்த்தோ குடும்பத்தை பார்த்தோ அல்லது நமக்கு நெருக்குமாக இருக்கிறார்கள் என்பதை பார்த்தோ பாஜக அரசு வேலை செய்யவில்லை. ஏழை மக்களின் நலனுக்காக சட்டம் ஒழுங்கை புதுப்பிக்க பாஜக அரசு உழைக்கிறது. 44 வளர்ச்சி திட்டங்களில் உத்தர் பிரதேசம் முன்னணியில் உள்ளது" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT