நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க் கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் இந்த தகவலைத் தெரிவித்தார்.
அவையில் அவர் பேசியதாவது, ''அரசியல் காரணத்திற்காக கடந்த 2017-ம் ஆண்டில் 99 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு 59 பேரும், 2019-ம் ஆண்டு 72 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக ஜார்கண்டில் 49 பேரும், மேற்கு வங்கத்தில் 27 பேரும், பிகாரில் 26 பேரும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளனர்.
2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகத்தில் 24 பேரும், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்'' என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.