நாடாளுமன்றம் 11வது நாளாக முடக்கம் 
இந்தியா

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் 11வது நாளாக முடக்கம்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

DIN

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 11 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை கூடிய மாநிலங்கவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், நாளை காலை 11 மணிவரை அவையை ஒத்திவைத்தனர். முன்னதாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மக்களவையில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT