முகப்பு
இந்தியா

சிவசேனை கட்சித் தலைவர் காங்கிரஸில் இணைந்தார்

சிவசேனை கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அசோக் ஷிண்டே நானா படோல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

சிவசேனை கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அசோக் ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

மகா விகாஸ் அகாதி ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அசோக் ஷிண்டே கூறினார். 

மகாராஷ்டிர மாநிலம் வரதா மாவட்டத்தின் ஹிங்கங்காத் தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வும், சிவசேனை கட்சித் தலைவருமான அசோக் ஷிண்டே இன்று (அக். 3) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் முன்னிலையில் அவர் இணைந்தார். 

அப்போது பேசிய அவர், மகா விகாஸ் அகாதி ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சியில் இணையும் மாற்றுக் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கையை காட்டுகிறது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.