இந்தியா

2019ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 1948 பேர் கைது

DIN

2019 ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 1948 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 34 பேர் மீது குற்றப்புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வருடாந்திர அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டில் 1948 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர்களில் 34 பேர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT