கர்நாடக புதிய அமைச்சரவை பதவியேற்பு 
இந்தியா

கர்நாடக புதிய அமைச்சரவை பதவியேற்பு

கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 29 பேருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

DIN

கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 29 பேருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

எடியூரப்பாவின் ராஜிநாமாவை தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி கா்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். இதையடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய தில்லி பாஜக மேலிடத்தில் தொடர் ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அமைச்சரவைப் பட்டியல் இறுதி செய்ததையடுத்து இன்று பிற்பகல் 2.15 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், 29 அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் பசவராஜ் பொம்மையும் கலந்து கொண்டார்.

புதிய அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT