இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை 
இந்தியா

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது.

DIN

புது தில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 56,83,682  முகாம்களில் 48,52,86,570  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 62,53,741  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,09,33,022 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,668  பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,625  பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து 38 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,353 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 18,47,518 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,31,42,307 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி 2.36 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.31 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 58 நாள்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாக ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT