இந்தியா

நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் போராட்டம்

ANI

நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் 12வது நாளாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததையடுத்து, அமளியை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், எச்சரிக்கையை மீறி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுக்கையிட்டதால் திரிணமூல் காங்கிரஸின் டோலா சென், நதீமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தாசேத்ரி, அர்பிதா கோஸ், மெளசம் நூர் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களை இன்று ஒருநாள் தொடர் முழுவதும் பங்கேற்க தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட 6 பேரும் மாநிலங்களவை நுழைவு வாயிலுக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT