கர்நாடகத்தில் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள 9 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் 100 மாணவர்களுக்கு அறிகுறியற்ற நிலையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்கலாமே - ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்
இதையடுத்து அவர்கள் அனைவரும் தனியார் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஜூலை 26ஆம் தேதி கர்நாடகத்தில் செவிலியர் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்க கேரளத்திலிருந்து 48 மாணவர்கள் வந்தநிலையில் அவர்களில் 21 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.