ஆன்லைன் வகுப்பில் ஹெட்செட் வெடித்ததில் இளைஞர் பலி
ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட் வெடித்ததில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளனர்.
ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட் வெடித்ததில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளனர்.
ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட்டை பயன்படுத்தி பாடம் படித்து கொண்டிருந்த 28 வயது நபர் உயிரிழந்ததாக ராஜஸ்தான் காவல்துறையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் ராஜஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், "ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரை சேர்ந்த ராகேஷ் குமார் நாகர், தனது வீட்டில் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | அமிதாப் பச்சனின் வீடு, ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...மும்பையில் பரபரப்பு
அப்போது, மின் சாதனத்தில் ஹெட்போனை பொருத்தி பயன்படுத்தியுள்ளார். திடீரென, ஹெட்போன் வெடித்ததில் அவர் சுயநினைவை இழந்தார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்" என்றார்.
இதுகுறித்து மருத்துவர் ருண்ட்லா கூறுகையில், "மருத்துவமனைக்கு அழைத்துவரும்போதே ராகேஷ் சுயநினைவை இழந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்" என்றார். கடந்த பிப்ரவரி மாதம்தான் ராகேஷ் நாகருக்கு திருமணம் நடந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.