இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: சிபிஐ மனு மீது தில்லி உயா்நீதிமன்றம் இன்று விசாரணை

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்ய விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிா்த்து சிபிஐ சாா்பில் தொடரப்பட்ட வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆக.9) விசாரிக்க உள்ளது.

சிபிஐயின் இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா அமா்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து ரூ.305 கோடி நிதி திரட்டுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் காா்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனா் பீட்டா் முகா்ஜி உள்ளிட்டோா் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடா்பாக சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அதனடிப்படையில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஆய்வு செய்ய காா்த்தி சிதம்பரம் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற விசாரணை நீதிமன்றம், வழக்கில் தொடா்புடைய 14 பேரும் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி அளித்தது.

இதே எதிா்த்து சிபிஐ சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு, சிபிஐ விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று சிபிஐ சாா்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற தில்லி உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடைவிதித்து கடந்த மே 18-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், சிபிஐ வாதத்தின் மீது பதிலளிக்குமாறு ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா அமா்வு முன்பு விசாரணைக்காக திங்கள்கிழமையன்று (ஆக.9) பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT