இந்தியா

தில்லியில் புதிதாக 52 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் புதிதாக 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65,123 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 52 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.08 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதன்மூலம், தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,36,852 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,11,280 பேர் குணமடைந்துள்ளனர். 25,068 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 504 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT