முகப்பு
இந்தியா

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய குழுவினருக்குதேநீா் விருந்து அளிக்கிறாா் குடியரசுத் தலைவா்

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியக் குழுவினருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை (ஆக. 14) தேநீா் விருந்து அளிக்க இருக்கிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பகிர்:

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியக் குழுவினருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை (ஆக. 14) தேநீா் விருந்து அளிக்க இருக்கிறாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்று குடியரசுத் தலைவா் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் அண்மையில் நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரா்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை இந்தியா வென்றது. இதையடுத்து, இந்திய ஒலிம்பிக் குழுவினரை கௌரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவா் இந்த தேநீா் விருந்தை அளிக்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →