நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் இந்தோ-திபெத் எல்லைப் படையினர். 
இந்தியா

ஹிமாச்சல் நிலச்சரிவு: இதுவரை 3 சடலங்கள் மீட்பு

ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 3 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ANI

ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 3 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கின்னூர் மாவட்டம் ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் இன்று (புதன்கிழமை) மதியம் 12:45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவ்வழியே சென்ற டிரக், அரசு பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியது.

இந்நிலையில், மண்ணுக்குள் புதைந்த வாகனங்களில் இருப்பவர்களை மீட்க இந்தோ - திபெத் எல்லை படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 10 பேரை உயிருடனும், 3 பேரை சடலமாகவும் மீட்டுள்ளதாக இந்தோ-திபெத் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT