இந்தியா

ஹிமாசல பிரதேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23-ஆக உயா்வு

DIN

ஹிமாசல பிரதேச மாநிலம் கின்னெளரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 11-ஆம் தேதி கின்னெளா் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மற்றும் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் நாளில் 13 போ் உயிருடனும், 10 போ் சடலமாகவும் மீட்கப்பட்டனா். வியாழக்கிழமை 4 சடலங்கள் மீட்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 6 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள 9 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநில பேரிடா் மேலாண்மை இயக்குநா் சுதீஷ் குமாா் மோக்தா தெரிவித்தாா். இத்துடன் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT