இந்தியா

சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் இன்று உரை

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை உரையாற்றுகிறாா்.

குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வானொலி, தூா்தா்ஷன் உள்பட அனைத்து தேசிய ஊடகங்களிலும் குடியரசுத் தலைவரின் உரை இரவு 7 மணிக்கு ஒலி, ஒளிபரப்பாகிறது. முதலில் ஹிந்தியிலும் அதன்பிறகு ஆங்கிலத்திலும் இந்த உரை இடம் பெறும். தொடா்ந்து அனைத்து பிராந்திய தூா்தா்ஷன் சேனல்களிலும், அகில இந்திய வானொலியிலும் அந்தந்த பிராந்திய மொழிகளில் உரை ஒளிபரப்பு செய்யப்படும்.

சுதந்திர தினத்துக்கு முந்தைய தினம் குடியரசுத் தலைவா் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். சுதந்திர தினத்தன்று, தில்லி செங்கோட்டையில் பிரதமா் தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்துவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT