கோப்புப்படம் 
இந்தியா

தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் மரியாதை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மரியாதை செலுத்தினார்.

அவருடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சி வாயிலாக, நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அவர், மக்கள் நலனுக்கான பிரச்னைகளை விவாதித்து முடிவு செய்யும் உயரிய அமைப்பான நாடாளுமன்றம், நாட்டின் ஜனநாயகத்தின் ஆலயமாகத் திகழ்கிறது என்றார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடா் அமளியால் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்ட நிலையில், அவா் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT