முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 12,294 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 12,294 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

கேரளத்தில் புதிதாக 12,294 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 12,294 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

கேரளத்தில் புதிதாக 12,294 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,578 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 12,294 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 14.03 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 18,542 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 142 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 35,10,909 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 18,743 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கேரளத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,72,239 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →