வாஜ்பாய் நினைவு நாள்: ராம்நாத் கோவிந்த், மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை 
இந்தியா

வாஜ்பாய் நினைவு நாள்: ராம்நாத் கோவிந்த், மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

DIN

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவர் என்ற பெருமைக்குரிய வாஜ்பாய், தனது 93 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமானார்.

தில்லியில் அவர் நினைவாக சதைவ் அடல் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நினைவிடம் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்யைய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!

தங்கம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

SCROLL FOR NEXT