திரிணமூலில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷ்மிதா தேவ்
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் இன்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் இன்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மிதா தேவ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று (திங்கள்கிழமை) காலை அறிவித்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் திரிணமூல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் மற்றும் அபிஷேக் பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Advertisement