அதிகரிக்கும் கரோனா பரவல் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேரளம் வருகை 
இந்தியா

அதிகரிக்கும் கரோனா பரவல் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேரளம் வருகை

கேரளத்தில் கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டிருக்கும் கரோனாவால் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில்  தொற்றின் நிலவரத்தை அறிய இன்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேரளம் வந்தார்.

DIN

கேரளத்தில் கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டிருக்கும் கரோனாவால் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில்  தொற்றின் நிலவரத்தை அறிய இன்று (ஆக-16) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேரளம் வந்தடைந்தார். 

கரோனாவின் தீவிரத்தை அறியவும் , அதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலவரங்களை அறிந்து கொள்ளவும் அவர் வந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும்  இன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் , மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பிற்கு பின் ஆளுநர் ஆரிப் முகமது கானையும் சந்திக்க இருக்கிறார்.

இறுதியாக தில்லி கிளம்புவதற்கு முன் திருவனந்தபுரம் அரசு மருத்துவனைக்கும் ,மருந்துகளை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் லேடெக்ஸ் நிறுவனத்திற்கும் செல்வார் என துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது கேரளத்தில் 1.79 லட்சம் பேர் கரோனா பாதிப்பில் இருக்கிறார்கள். கடந்த வருடத்திலிருந்து இதுவரை 18,601 பேர் கரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சா் கோவி.செழியன்

கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம்: உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வேண்டும்: பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம்: இடம் தோ்வுக்கு எதிா்ப்பு!

SCROLL FOR NEXT