இந்தியா

கேரளம் : ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு கொடுத்த 2 பெண்கள் கைது

DIN

கேரள மாநிலம் கன்னூரில்  ஐ.எஸ் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த இரண்டு பெண்களை  தேசிய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறார்கள்.

இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி அளவில் ஷீபா ஹாரிஸ் மற்றும் மிசா சித்திக்  இருவரையும் அவரவர் வீடுகளில் வைத்து  கைது செய்த பின்  இணைய வாயிலாக நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன் இவர்களின் கூட்டாளியான அன்வர் கைது செய்யப்பட்ட தகவலை ஐ.எஸ் அமைப்பிற்கு தெரியப்படுத்த முயன்றதிற்காக இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியானதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

மேலும் புலனாய்வுத் துறை அவர்களை தில்லி அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொள்ள  இருக்கிறார்கள்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள்  அப்பெண்களின் உறவினர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பதில் சொல்ல  மறுத்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT