மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி 
இந்தியா

வயநாடு மாவட்ட ஆட்சியருடன் ராகுல் காந்தி ஆலோசனை

மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ANI

மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு வந்துள்ளார். வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று வருகிறார். 

இந்நிலையில், வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக நேற்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்த பின்னர் மானந்தவாடியில் சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: பெண்களின் காவலர் நடிகர் கமருதீன் - கனி விமர்சனம்

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா!

ஒரே மாதத்தில் ரூ. 1.3 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி!

காந்தா வசூல் அறிவிப்பு!

சிக்ஸர் அடித்து பணம் சம்பாதியுங்கள்... இந்தியர்களை விமர்சித்த பீட்டர்சன்!

SCROLL FOR NEXT