முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 36 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 66,445 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 36 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 76 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,37,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14,11,688 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 25,077 பேர் பலியாகிவிட்டனர்.

427 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.