இந்தியா

சிறுமியின் பெற்றோருடன் ராகுல் எடுத்த புகைப்படம் நீக்கம்

ANI

தில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி எடுத்துக் கொண்ட புகைப்படம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அச்சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி, அது தொடா்பான படத்தை சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிா்ந்திருந்தாா்.

சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காணொலியை ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிா்ந்திருந்தாா். இது தொடா்பாக, ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட அந்த புகைப்படம் மற்றும் காணொலிகளை சமந்தப்பட்ட நிறுவனமே இன்று நீக்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோா், அவா்களின் உறவினா்களது அடையாளங்களை வெளிப்படுத்தும் விவரங்களைப் பொதுவெளியில் பகிரக் கூடாது என்று போக்ஸோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதியை மீறியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களின் கணக்குகளை சுட்டுரை நிறுவனம் முடக்கியது.

இந்நிலையில், கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட படத்தைப் பயன்படுத்துவதற்கு சிறுமியின் குடும்பத்தினா் வழங்கிய ஒப்புதல் கடிதத்தை ராகுல் காந்தி தாக்கல் செய்தாா். அதை ஏற்று அவரது சுட்டுரைக் கணக்கு மீண்டும் செயல்பட அந்நிறுவனம் அனுமதித்தது.

எனினும், படத்தில் உள்ளோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT