சோனியா காந்தி(கோப்புப்படம்) 
இந்தியா

சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை: ஸ்டாலின், மம்தா, உத்தவ் உள்ளிட்டோர் பங்கேற்பு

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். 

ANI


பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். 
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, இன்று மாலை காணொலி வாயிலான கூட்டத்துக்கு சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கான அழைப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அங்கமாகவே இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT