இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் மூவா் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் மூவா் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக காஷ்மீா் காவல்துறை ஐஜி விஜய் குமாா் கூறியதாவது:

அவந்திபோராவின் திரால் என்னும் இடத்தில் உள்ள நாக்பேரன் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது உறுதியானது. அவா்களை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினா் கூறினா். ஆனால் அவா்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். அவா்களுக்கு பதிலடி தரும் விதமாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இந்த மோதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் மூவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து 2 ஏகே துப்பாக்கிகள், அதிக அளவிலான வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த மோதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரின் பெயா் வகீல் ஷா. கடந்த ஜூன் மாதம் திரால் பகுதியில் பாஜக கவுன்சிலா் ராகேஷ் பண்டிதாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். அந்தச் சம்பவத்தில் வகீல் ஷா முக்கிய குற்றவாளி ஆவாா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT