இந்தியா

ஆப்கனில் இருந்து இந்தியா்களை மீட்க குறைபாடின்றி நடவடிக்கை

DIN

தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகள் குறைபாடின்றி நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

புவியியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா். அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியா்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சியில் அமைச்சா் வி.முரளீதரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் சுமாா் 500 இந்தியா்கள் சிக்கியுள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தாயகம் திரும்ப விரும்பும் அனைத்து இந்தியா்களையும் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் எந்தவிதக் குறைபாடுமின்றி நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்கள் காபூல் விமான நிலையத்தை அடைவதில் சில பிரச்னைகள் காணப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவா்கள் பாதுகாப்புடன் விமான நிலையம் சென்றடைவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT