இந்தியா

ஆந்திரம்: 2 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கு கரோனா

ANI


கிருஷ்ணா: ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டம் மடினேபள்ளி மண்டல் பகுதியில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இவ்விரு பள்ளிகளுக்கும் இரண்டு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்கள் யாருக்கேனும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT