இந்தியா

மகாராஷ்டிரம்: மத்திய அமைச்சர் நாராயண் ராணே மீது வழக்குப்பதிவு

ANI

மகாராஷ்டிரத்தில் மாநிலத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மத்திய அமைச்சர் நாராயண் ராணே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்காட் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், “மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன்” எனக் கூறினார்.

அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மற்றும் புணே காவல் நிலையங்களில் சிவசேனை அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாசிக் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெளிய மத்திய அமைச்சர் நாராயணுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சிவசேனை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாஜக அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT