இந்தியா

குடியரசுத் தலைவா் நாளை உ.பி. பயணம்

DIN

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை முதல் (ஆக.26) நான்கு நாள் பயணமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு செல்கிறாா்.

லக்ளெனவில் அம்பேத்கா் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொள்ளும் அவா், மறுநாள் அந்த மாநிலத்தின் முன்னாள்

முதல்வரான சம்பூா்ணானந்தின் உருவச்சிலையை திறந்து வைக்கிறாா்.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி கோரக்பூரில் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் மகா வித்யாலயாவிற்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், மகாயோகி கோரக்நாத் விஸ்வ வித்யாலயாவை திறந்து வைக்கிறாா்.

ஆகஸ்ட் 29-ஆம் தேதி லக்ளெனவில் இருந்து ரயில் மூலம் அயோத்தி செல்லும் குடியரசுத் தலைவா், அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா். பின்னா், அயோத்தியில் உருவாக்கப்பட்டு வரும் ராமா் கோயிலுக்குச் சென்று பூஜைகளை மேற்கொள்வாா். அதையடுத்து, கோயில் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிடுவாா் என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT